16 வயதான மாணவன் சடலமாக மீட்பு

135

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவு, மகிழவெட்டுவான் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனொருவனின் சடலத்தைத் ஞாயிற்றுக்கிழமை மாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மகிழவெட்டுவான் – கற்குடா கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான நல்லரெட்ணம் யுகேசன் என்பவரின் சடலமே மீட்கப்பட்டு உடற் கூராய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மகிழவெட்டுவான் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவன் சிறிது காலமாக உளநல ஆற்றுப்படுத்தல் வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாகவும் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாருமில்லாத வேளையில் இவர் சடலமாகக் காணப்பட்டார் என்றும் உறவினர்கள் பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE