16 வயது பெண்ணுக்கு லிப் கிஸ் கொடுத்த கமல் ஹாசன்.. பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசுகிறார்.. கொந்தளித்த பிரபலத்தின் மனைவி

96

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இவர் வெளியேற்றப்பட்டதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட, பெண்களின் பாதுகாப்பு கருதி தான் இவருடைய வெளியேற்றம் என கமல் கூறினார்.

வீட்டிற்குள் இருந்த பெரும்பான்மையான போட்டியாளர்களும் இதை தான் கூறினார்கள். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வரும் ரசிகர்களுக்கு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்தது மிகவும் தவறு என்றும் கூறினார்கள்.

கொந்தளித்த பிரபலத்தின் மனைவி
இந்நிலையில் பிக் பாஸ் 7ல் கலந்துகொண்டு கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய யுகேந்திரனின் மனைவி பிரதீப் வெளியேற்றப்பது குறித்து பேசியுள்ளார்.

இதில் ‘பெண்களின் பாதுகாப்புக்காக தான் இந்த முடிவு என கூறுகிறார் கமல். புன்னகை மன்னன் படத்தில் நடிகை ரேகாவிடம் அனுமதி கேட்காமல் அவருக்கு லிப் கிஸ் கொடுத்தார் கமல். அப்போது நடிகை ரேகாவிற்கு 16 வயது தான். அந்த படம் மட்டுமின்றி கமல் நடித்த பல படங்களில் நடிகையுடன் லிப் கிஸ் இருக்கும். இப்படியிருக்கும் நிலையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கமல் பேசுவது எனக்கு புரியவே இல்லை’ என பேசியுள்ளார்

SHARE