சிரேஸ்ட வீரர்கள் இல்லாத இளம் அணி பெற்ற வெற்றி- ஹதுருசிங்க

197

மேற்கிந்திய அணிக்கு எதிரான வெற்றி இலங்கை அணியின் இளம் வீரர்களிற்கு தன்னம்பிக்கையை அளிக்கும் என இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்றது அணிவீரர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த தொடரில் பல எழுச்சிகளையும் வீழ்;ச்சிகளையும் சந்தித்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக பின்னடைவான நிலையிலிருந்து மீண்டு தொடரை சமப்படுத்தியது மகிழ்ச்சியான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஆரம்பத்திலிருந்து அழுத்தத்தில் இருந்தோம்,ஜேசன் ஹோல்டர் மேற்கிந்திய அணிகளை சிறந்த முறையில் வழிநடத்தினார்,மேற்கிந்திய அணியின் இரண்டாவது இனிங்சில் ஐம்பது ஓட்டங்களிற்கு ஏழு விக்கெட்களை நாங்கள் வீழ்த்தியவேளையே எங்கள் வெற்றி உறுதியானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது இனிங்ஸில் நாங்கள் பந்து வீசுவதற்கு முன்னர் சுரங்கலக்மல் வீரர்களுடன் உரையாடினார்  அது பலனளித்தது,அவர் முன்னனயிலிருந்து அணியை வழிநடத்தினார்,இரண்டாவது இனிங்சில்  அவரது பந்துவீச்சு முக்கியமாக அமைந்தது எனவும் சன்டிக  ஹதுருசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இது சிரேஸ்டவீரர்கள் இல்லாத இளம் அணி அதன் காரணமாக இந்த வெற்றி அவர்களிற்கு அதிக நம்பிக்கையை கொடுக்கும் நாங்கள் இந்த வெற்றிக்கு பின்னர் மிகுந்தநம்பிக்கையுடன் காணப்படுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குசல்மென்டிஸ் மிகத்திறமை வாய்ந்த வீரர்,அவர் மிகச்சிறந்த வீரர் எதிர்காலத்திற்கான வீரர் எனவும் ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.

SHARE