திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தின் ஊடக சந்திப்பும் கலந்துரையாடலும்

113

(டினேஸ்)

திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தின் ஊடக சந்திப்பும் கலந்துரையாடலும்  07 ஆம் திகதி திருமலை குளக்கோட்டன் மண்டலத்தில் சங்கத்தின் தலைவி எஸ்.தேவியின் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது திருமலை மாவட்டத்தின் உள்ள பிரதேசங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் பலரும் கலந்துகொண்டனர்

அங்கு உரை நிகழ்த்திய சங்கத்தலைவி. கடந்த மாதம் 20.06.2018 அன்று 8 மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவிகளாகிய நாங்கள் ஜெனீவா சென்றோம்.திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் தகவல்கள் அடங்கிய படிவங்களை அங்கு ஒப்படைத்தோம்.இலங்கை அரசாங்கத்தினால் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான எந்த முடிவும் வழங்கப்படாத நிலையிலேயே நாங்கள் ஐ.நா விடம் சென்று சர்வதேச அழுத்தம் இலங்கைக்கு கொடுக்குமாறு கேட்டிருந்தோம். அங்கு இலங்கை ஜெனீவா தூதரகத்தின் சந்திப்பை ஏற்படுத்தி அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டோம்.

அதன் பின்னர் நிறுவனங்கள் பல தொடர்ந்து 10 நாட்கள் சந்தித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் முன் வைத்தோம்.பின்னர் எங்கள் கோரிக்கைகளுக்கான முடிவுகளை எடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுமென கேட்டோம். அதற்கு உங்களது படிவங்கள் தகவல்கள் 35 இடங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது என்றும் உங்களுக்கு இதற்கான நல்ல பதிலை தருவார்கள் என்றும் எமக்கு கூறினார்கள். நாங்கள் ஜெனிவாவிலும் எமது உறவுகளுக்கான நீதி வேண்டி போராட்டம் நடத்தினோம். எங்கள் உறவுகளுக்கான நீதியான முடிவை வழங்குமாறும் கேட்டிருந்தோம். எங்களுக்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம். என சங்கத்தின் தலைவிஎஸ்.தேவியின் கருத்தும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE