169 ஓட்டங்கள் இங்கிலாந்துக்கு வெற்றியிலக்கு

146

ரி20 உலகக் கிண்ணத் தொடரின் 2 வது அரையிறுதி போட்டி, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று அடிலைய்ட் மைதானத்தில் இடம்பெறுகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.

இதற்கமைய களம் இறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 168 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பாக விராட் கோலி 50 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்டியா 63 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் கிரஸ் ஜேர்தன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 169 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றால் ரி20 உலகக் கிண்ண போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். – ada derana

SHARE