17 வயது யுவதியொருவர் ஆயுதம் தாங்கிய கும்பலொன்றினால் கடத்தப்பட்டுள்ளார்.

127

அம்பலாந்தோட்டை வலவெட்ட பகுதியில் இன்று அதிகாலை 17 வயது யுவதியொருவர் ஆயுதம் தாங்கிய கும்பலொன்றினால் கடத்தப்பட்டுள்ளார்.

ஆயுதங்களுடன் வீட்டிற்குள் பிரவேசித்த ஆறுபேர் அடங்கிய கும்பல் 17 வயது யுவதியின் தந்தையையும்  சகோதரியையும் தாக்கிய பின்னர்  யுவதியை கடத்திச்சென்றுள்ளது  என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் கதவையும் யுவதி உறங்கிக்கொண்டிருந்த அறையின் கதவையும் உடைத்து உள்ளே நுழைந்த கும்பல் யுவதியை கடத்திச்சென்றுள்ளனர் என தெரிவித்துள்ள பொலிஸார் வீட்டின் மேல் குறிப்பிட்ட கும்பல் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இன்று  அதிகாலை 2.30 மணியளவில்  இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள கடத்தப்பட்ட யுவதியின் தந்தை துப்பாக்கி சத்தம் கேட்டு தான் வீட்டிலிருந்து வெளியே வந்தவேளை  குறிப்பிட்ட கும்பலை சேர்ந்த ஒருவர் தனது தலையில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டினார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனது மூத்த மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய பின்னர் இளைய மகளை கடத்திச்சென்றுள்ளனர் என தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE