ஆணுறை விளம்பரத்தில் நடிக்கிறார் காஜல் : சம்பளம் ரூ. 2 கோடி

394

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் கலக்கிய காஜல் அகர்வால் சமீப காலமாக தனது கவனத்தை விளம்பர படங்களில் நடிப்பதிலும் திருப்பி இருக்கிறார். தேங்காய் எண்ணெய், காபி, காலணி விளம்பரங்கள் நடித்து அதற்கும் கோடிகளில் சம்பளத்தை பெறுகிறார். தன் வயதொத்த ஹீரோயின்கள் திருமணம் செய்துகொண்டு செட்டிலாவதுடன் இளம் ஹீரோயின்களின் அதிரடி வரவு அவரது திரையுலக வாய்ப்பை ஆட்டம் காண வைத்திருக்கிறது. நடித்தவரை போதும் என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீக்கிரமே நடிப்புக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்திருக்கும் காஜல் அதிரடியாக ஒரு முடிவை எடுப்பதுபற்றி பரிசீலித்து வருகிறாராம்.

ஆணுறை விளம்பர படமொன்றில் நடிக்க கேட்டு அவரை ஒரு நிறுவனம் அணுகி உள்ளதாம். இனியும் இமேஜ் பார்த்துக்கொண்டிருந்தால் சரிவராது என்ற எண்ணத்திலிருக்கும் காஜல், குறிப்பிட்ட விளம்பரத்தை ஏற்பதுபற்றி தீவிரமாக யோசித்து வருகிறாராம். இரண்டரை கோடி சம்பளம் தருவதாக இருந்தால் ஓ.கே. அத்துடன் எந்த விதத்திலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், ஆபாச வசனம் பேச மாட்டேன் என்று பல கண்டிஷன்களை விதித்திருக்கிறாராம். இதற்கெல்லாம் ஓகே சொன்னால் அந்த விளம்பரத்தில் நடிப்பது பற்றி இறுதி முடிவு எடுத்து கூறுவதாக தெரிவித்திருக்கிறாராம். பட வாய்ப்புகளை பெறவே அவர் இந்த விளம்பரத்தில் நடிக்கப்போவதாகவும் ஒரு தரப்பு கூறி வருகிறது

 

SHARE