ஒரு வார காலத்திற்கு ஊர்வலங்கள், பேரணிகள் நடத்தத் தடை

358
எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு ஊர்வலங்கள் பேரணிகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இந்த தடை உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.

சட்டம் ஒழுங்கை மீறிச் செயற்படும் தரப்பினருக்கு தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இலக்கத் தகடற்ற வாகனங்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

 

SHARE