டோனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு

188

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, தன்னுடைய மனைவி சாக்சியை திருமணம் செய்துகொள்ள ராபின் உத்தப்பா தான் காரணம் என செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, தன்னுடைய மனைவி சாக்சியை கடந்த 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு தற்போது ஷிவா என்ற மகள் உள்ளார்.

இவர்கள் இருவரும் எப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டனர் என்பது பற்றி டோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தை பார்த்த அனைவருக்குமே தெரியும்.

இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய 30 வது பிறந்தநாளை கொண்டாடிய சாக்சி, பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்கள் மற்றும் வீட்டிற்கு வருகை தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து இந்திய வீரர் ராபின் உத்தப்பா மற்றும் அவருடைய மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ‘இவர் தான் நானும், மஹியும் வாழ்வில் இணைவதற்கு காரணம், என தெரிவித்துள்ளார்

SHARE