18 வருடமாக நடந்து வந்த ஜெயலலிதா வருமான வரி வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

422

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் கடந்த 1992-1993 மற்றும் 1993-1994-ம் ஆண்டுக் கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வில்லை என்று கூறி 1996-ல் வருமான வரித் துறை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஜெயலலிதா, சசிகலா பங்குதாரர்களாக இருந்த ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் மீதும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

jeyaa 55

இந்த வழக்குகளை தள்ளு படி செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் தாக்கல் செய்த மனுக்கள் 2006-ல் நிராகரிக் கப்பட்டது.
இதன் பிறகு உச்ச நீதி மன்றத்திலும் ஜெயலலிதா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதி மன்றமும் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக எழும்பூர் பெருநகர பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த ஆகஸ்டு மாதம் வழக்கு விசாரணை வந்த போது ஜெயலலிதா, சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அப்போது வருமான வரிக்கணக்கு காட்டாததற்கான அபராத தொகையை செலுத்த தயா ராக இருப்பதாக வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரலுக்கு ஜெயலலிதா, சசிகலா சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

இந்த மனுவை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

கடந்த 6-ந் திகதி இந்த வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தட்சிணா மூர்த்தி முன்னிலையில் நடந்த போது, ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்துள்ள சமரச மனுவின் மீது நவம்பர் 28ம் திகதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

எனவே போதிய கால அவகாசம் இல்லாததால் விசாரணையை டிசம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று வாதாடினார்.

அப்போது ஜெயலலிதா, சசிகலா கோர்ட்டில் நேரில் ஆஜராக விலக்களித்த நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 1ம் திகதிக்குள் ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில் வருமான வரித் துறை சார்பில் நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தாக்கல் செய்திருந்த சமரச மனுவை ஏற்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

வருமான வரி கட்டாமல் விட்டதற்காக வருமான வரித்துறை விதித்த அபராத தொகையை செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் 18 வருடமாக நடந்து வந்த வழக்கு முடிவுக்கு வருகிறது.

 

SHARE