கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியுனுள் 18 ஆயிரத்து 750 பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அடுத்த ஆண்டுக்கான பாதீட்டுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வாடகை அடிப்படையில் 3 ஆயித்து 500 பாடசாலைகளுக்கு 50 கணணிகள் விகிதம் வழங்குவதற்கு செயற்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன் சர்வதேச தரத்திற்கு ஏற்ப தலா 50 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை விகிதம் வழங்கவும் செயற்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.