18 வயதில் மருத்துவராகும் வாய்ப்பு பெற்ற அமெரிக்க வாழ் இந்திய சிறுவன்!

293

அமெரிக்க வாழ் இந்திய சிறுவனுக்கு 18 வயதிலேயே மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கேரளாவை சேர்ந்த பிஜு ஆபிரகாம்-தஜி ஆபிரகாம் ஆகியோரின் மகன் தனிஷ்க் ஆபிரகாம் 12 வயதுக்குள் 3 பட்டங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் சிறந்த கல்விமான்களை உறுப்பினர்களாக கொண்ட மிக முக்கிய திறன் மையமான ‘மென்சா’வில் 4 வயதிலேயே ஆபிரகாமை இவனது பெற்றோர் சேர்த்துவிட்டனர்.

அவனுக்கு 7 வயது முடிவடைவதற்குள் வீட்டிலேயே பள்ளிக்கல்வியை கற்பித்து விட்டனர்.

இதனால் அவன் 2014-ம் ஆண்டு அதாவது தனது 10-வது வயதிலேயே மாநில தேர்வு எழுதி உயர்நிலைப்பள்ளி டிப்ளமோவுக்கு இணையான பட்டம் பெற்று விட்டான்.

அதன் பிறகு சக்ரமென்டோவில் உள்ள அமெரிக்கன் ரிவர் கல்லூரியில் சேர்ந்து படித்த அவன் கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் கணிதம், அறிவியல் மற்றும் வெளிநாட்டு மொழிக்கல்வி ஆகிய 3 பாடத்திலும் பட்டம் பெற்று சாதனை படைத்தான்.

அமெரிக்காவில் 11 வயதிலேயே பட்டதாரியான தனிஷ்க்கின் அபார சாதனை ஜனாதிபதி ஒபாமாவின் கவனத்தை ஈர்த்தது. இதைத்தொடர்ந்து அவர் தனிஷ்க்குக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து கடிதம் அனுப்பி வைத்தார்.

தற்போது 12 வயதாகும் தனிஷ்க் மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பித்து உள்ளான்.

இதுகுறித்து ஆபிரகாம் கூறியதாவது, 18 வயதில் நான் மருத்துவராகிவிடுவேன்,சிறு வயதில் இருந்தே எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருப்பேன், அதுதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது

எதிர்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக விரும்புவதே எனது ஆசை என கூறியுள்ளான்.

SHARE