18 வயது மாணவி ஒருவரை அரை நிர்வாணமாக படம் எடுக்க உதவிய ஆசிரியர்

218

பிரித்தானியாவில் மாணவர்களுக்கு கலையைக் கற்றுக் கொடுக்கும் ஒரு ஆசிரியர், பெண்ணின் உடல் தொடர்பான ஒரு புராஜக்டுக்காக 18 வயது மாணவி ஒருவரை அரை நிர்வாணமாக படம் எடுக்க அவரது வகுப்பில் படிக்கும் இன்னொருவருக்கு உதவியுள்ளார்.

பிரித்தானியாவின் Lincoln நகரிலுள்ள பள்ளி ஒன்றில் கலை ஆசிரியராக பணி புரியும் Karen Hutchinson (46), தனது கெமராவை ஒரு மாணவிக்கு இரவல் கொடுத்ததோடு 18 வயது மாணவி ஒருவரை அரை நிர்வாணமாக புகைப்படம் எடுக்க அவளது வகுப்புத்தோழியான ஒரு 17 வயது மாணவிக்கு உதவியுள்ளார்.

அவ்விருவருக்கும் ஒரு அறையை ஒதுக்கிய Karen, அந்த அறையை வெளிப்புறமாக பூட்டி அவர்களுக்கு காவலும் இருந்திருக்கிறார்.

அத்துடன் நிறுத்தாமல், அந்த அரை நிர்வாணப்படங்களை டவுன்லோடு செய்ததோடு, அவற்றை ஒரு மாணவிக்கு மெயிலிலும் அனுப்பியிருக்கிறார்.

இது பள்ளி விதிகளுக்கு புறம்பானதாகும்.அந்த புகைப்படங்களை அந்த மாணவியுடைய போர்ட்ஃபோலியோவில் இணைத்ததால் வெளியாட்களும் அவற்றைப் பார்க்கும் ஒரு நிலையை ஏற்படுத்தியதோடு, அதை பள்ளியின் நோட்டீஸ் போர்டிலும் ஒட்டியதால் பள்ளி மாணவர்களும் அந்த நிர்வாணப் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறார்கள்.

பள்ளியில் இருக்கும் மாணவ மாணவிகள் எப்போதும் தங்கள் சீருடையை சரியான முறையில் அணிவதை உறுதி செய்வேன் என்பது, ஆசிரியர்கள் கையொப்பமிடும் உறுதிமொழிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Karen உடனடியாக தனது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதோடு பின்னர் பணி நீக்கமும் செய்யப்பட்டார். சிறார் ஆபாச புகைப்படங்களை அனுப்பியதன் மூலம் கடும் நடவடிக்கைகளுக்கு அவர் ஆளாகியிருக்கலாம் என்றாலும், அவர் மீது வேறெந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

தனக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் குறித்து கருத்துக் கூறிய Karen, எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கற்றுக் கொடுத்தல் என்னும் வரத்தை பயன்படுத்த இயலாத சூழ்நிலைக்கு ஆளாகிவிட்டேன் என்றார்.

SHARE