இலங்கையில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டாலும் இன்னும் பல சவால்கள் உள்ளன; அமெரிக்கா எச்சரிக்கை!

396

 

இலங்கையில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டாலும் இன்னும் பல சவால்கள் உள்ளன; அமெரிக்கா எச்சரிக்கை! கூடிய தேர்தல் ஒன்று இடம்பெற்றுள்ளமை குறித்தும் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளமை குறித்தும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் கெரி இலங்கையில் இன்னமும் பல சவால்கள் உள்ளன என்றும் எச்சரித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவதற்காக புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு உதவுவதற்கு தாம் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது இந்திய விஜயத்தின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் விருப்பத்தை வெளிப்படுத்துவற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ள கெரி, அதற்கு சில நாட்களுக்கு முன்னர் அமைதியான தேர்தலை வலியுறுத்தி மஹிந்த ராஜபக்‌ஷவுடனும் தான் உரையாடினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தேர்தல் ஒன்று இடம்பெற்றுள்ளமை குறித்தும், அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளமை குறித்தும், மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் இன்னமும் பல சவால்கள் உள்ளன என்றும் எச்சரித்துள்ளார். மனித உரிமைகள், நல்லாட்சி போன்ற விடயங்களுக்கு தீர்வை காண்பதற்கான பேச்சுக்களுக்கு உதவுவதற்கு நாங்கள் தயார் என உடனடியாக தெரிவித்துள்ளளோம். இலங்கை மக்களுக்கான புதிய அத்தியாயத்தை, புதிய தருணத்தை, புதிய வாய்ப்பை ஏற்படுத்துவத்துவதாக இந்த புதிய அரசு அமையும். – என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE