நோர்வே நாட்டில் திருட சென்ற இடத்தில் திருடன் காருக்குள் மாட்டி கொண்டதால் பொலிசாரை அழைத்து உதவி கேட்ட சம்பவம் மிகவும் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருடர்கள் பற்றி பல சுவாரசிய கதைகள் நாம் கேட்டிருப்போம் அது போல் திரைபடங்களிலும் பல பார்த்திருப்போம். அது போன்ற ஒரு சுவாரசிய சம்பவம் தான் இது
நோர்வே நாட்டில் ட்டோந்தலக் என்ற பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றை திருட முற்பட்டுள்ளான்.
காருக்குள் ஏற தன்னிடம் இருந்த போலி கீ மூலம் திறந்து உள்ளே சென்றுள்ளான். இந்நிலையில் கார் ஆட்டோ லாக்கில் விழுந்துள்ளது. அதை திறக்க முற்பட்டும் வேலைக்கு ஆகவில்லை.
இந்நிலையில் கார் திறக்காததால் பயந்து போன அவன் தான் மூச்சு முட்டி இறந்து விடுவேண்டும் என்று எண்ணி. தன்னிடம் இருந்த மொபையில் போன் மூலம் பொலிசாரை உதவிக்கு அழைத்துள்ளான். உடனே அங்கு வந்த பொலிசார் அவனை பத்திரமாக மீட்டனர்.
அந்த இளைஞர் வயது பூர்த்தியடையாததால் அவனின் பெற்றோரை அழைத்த பொலிசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.