சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் நடந்த கூட்டம் ஒன்றிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
நாடாளுமன்றம் எப்படியும் 100 நாளில் கலைக்கப்படும் என்ற நிலையில் தனக்கு நம்பிக்கையான ஒருவரை நியமிக்க விரும்புகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் வட்டார தகவல்களின்படி கடந்த புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும் சந்தித்துப் பேசினர் என்றும் தெரிகின்றது. எது எவ்வாறாயினும் இந்த வரும் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடும் நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் நீக்கம் குறித்துத் தெரியவரும்.