ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரே ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொண்டனர்.