எங்களை நாங்களே ஆளுகின்ற சமுதாயமாக இருக்க வேண்டும்! மாவைசேனாதிராஜா
எங்களை நாங்களே அங்கிகரித்தவர்களாக நாங்களே எங்களை ஆளுகின்ற ஒழுக்கமுள்ள சமுதாயமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை ஆயிரம் மக்கள் தங்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய முன்னைநாள் அதிபர் திரு.ம.ச.பத்மநாதன் அவர்களுக்கு இன்று 21-01-2015 மணிவிழா எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கலந்துகொண்டு உரைநிகழ்த்துகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
நாங்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருந்தால்தான் நாகரீகமுள்ளவர்களாக ஒழுக்கத்தைப்பேணி பாதுகாப்பவர்களாக எங்களை நாங்களே அங்கிகரித்தவர்களாக நாங்களே எங்களை ஆளுகின்ற ஒழுக்கமுள்ள சமுதாயமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை ஆயிரம் மக்கள் தங்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள்.
அதன் விளைவை நாம் அனுபவிக்க வேண்டாமா? இந்த மக்கள் நாகரீகத்தின் உச்சிக்கு செல்லவேண்டாமா? ஒழுக்கமுள்ள சமுதாயமாக அடிமையற்ற சமுதாயமாக விடுதலைபெற்ற சமுதாயமாக தன் தாயை தன்மொழியை தமிழினம் தன்னைத்தானே ஆழுகின்ற ஒழுக்கமுள்ள சமுதாயமாக நாகரீகத்தை கொடுக்கின்ற சமுதாயமாக நாங்கள் வாழவேண்டும் என்பதற்காக இத்தனை ஆயிரம் ஆயிரம் இலட்சக்கணக்கான உயிர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனக்குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் கிசோர் கல்விப்பணிப்பாளர்கள், சமயப்பெரியோர்கள் ,பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்தகொண்டனர்.