19ஆவது திருத்தத்தால் மக்கள் மட்டுமன்றி எமது நாடும் பலன் பெறும்: தலைவர் சம்பந்தன்

389

 

19 அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மாற்றப்பட்டு உயர்மட்ட நிலையிலுள்ள நீதித்துறையின் சுதந்திரமானதும் தனித்துவமான தன்மையினையும் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்த  தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இத் திருத்தத்தின் ஊடாக மக்கள் மட்டுமன்றி எமது நாடும் வளப்படும் எனவும் தெரிவித்தார்.

 

19ஆவது திருத்த சட்டம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தொரிவித்தார்.

 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

 

19ஆம் திருத்த சட்டத்தை மாற்றுவதன் மூலம் மக்கள் மட்டுமல்ல நாடும் சிறந்த பலனை பெறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.கடந்த 1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார முறைமை அமுலுக்கு வந்த நாள் முதல், இந்த பதவி குறித்து பல சர்ச்சைகள் இருந்து வந்துள்ளன.

 

ஆனால், இன்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் உரைகளை கேட்கும் போது, ஜனாதிபதி முறைமையில் மாற்றம் வருவது உறுதியாகியுள்ளது. மக்களால் தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமக்கு சாதகமான முறையில், கட்சியில் இருந்து பிறிதொரு கட்சிக்கு சென்று அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் போன்ற பதவிகளைப் பெறுகின்றனர்.

 

19ஆம் திருத்த சட்டம் மாற்றப்படும் போது, இந்த முறைமைக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
உயர்மட்ட நிலையிலுள்ள நீதித்துறையின் சுதந்திரமானதும், தனித்துவமான தன்மையினையும் பாதுகாக்க முடியும்.

 

நீதித்துறைக்கான பதவிகளை சுதந்திரமானதும் பாரபட்சமற்ற வகையிலும் மேற்கொள்ள முடியும்.

 

இந்த யோசனையை நிறைவேற்றுவதன் மூலம், தேர்தல்கள் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு, தேசிய காவல்துறை ஆணைக்குழு, கையூட்டல் ஒழிப்பு ணைக்குழு, நிதி ஆணைக்குழு உட்பட பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுவதுடன், அவற்றின் சுதந்திர தன்மையினையும் பேண முடியும் என ஆர். சம்பந்தன் தமது 10உரையில் குறிப்பிட்டார்.

 

தற்போதுள்ள அரசிலமைப்பின் ஊடாக ஒரு வருடத்தில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. இது பாதகமான விடயமாகும். சட்டவாக்கத்திற்கும் மக்களின் ஆணைக்கும் இது பாதமாகவே அமைந்தது.

 

எனவே, 19 வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அந்த முறை நீக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது எனவும் ஆர்.சம்பந்தன் குறிப்பிட்டார்.

SHARE