19 ஆவது அரசியலமைப்பு மாற்றங்கள் ஊடாக ஊடகவியலாளர்களை சிறைவைக்கக்கூடிய வகையில் சரத்துக்கள் உள்ளடக்கம்!

290

 

ஊடகவியலாளர்களைக் குற்றவியல் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தக்கூடிய சரத்தை 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ள ஆதரவு வழங்கப்போவதில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

 
சிரச தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் சட்டண அரசியல் விவாத நிகழ்ச்சியின் நேற்றைய (23) ஔிபரப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
 
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் செயற்குழு தருணத்தில் முன்வைக்கப்பட்ட மாற்றங்கள் ஊடாக ஊடகவியலாளர்களை குற்றவியல் சட்டத்தின் கீழ் சிறைவைக்கக்கூடிய வகையில் சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
தேர்தலின் போதோ மக்களின் கருத்துக் கணிப்பின் போதோ தேர்தல்கள் ஆணையாளர் விடுக்கும் விதிகளின் பிரகாரம் செயற்படாத தனியார் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்க முடியுமென 28 ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அந்தத் தண்டனைக்கு அமைவாக அதிகபட்சம் 3 வருட சிறைத்தண்டனையை விதிக்க முடியும் என்பதுடன், ஒரு இலட்சம் ரூபாவுக்கு அபராதம் விதிக்கவும் முடியும்.
நன்றி நியூஸ் பெஸ்ட்
SHARE