19 நாட்கள் முடிவில் விக்ரம் படத்தின் ஏரியா வாரியான வசூல் !

8

 

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

அதன்படி தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக அதிக வசூல் செய்த திரைப்படமாக திகழ்ந்து வந்த பாகுபலி பட வசூலை முந்தி விக்ரம் திரைப்படம் தமிழகத்திலே அதிக வசூல் செய்த திரைப்படமாக இடம்பிடித்துள்ளது.

மேலும் தமிழகத்தை தவிர மற்ற இடங்களிலும் இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் படைத்திராத வசூல் சாதனைகளை விக்ரம் திரைப்படம் செய்து வருகிறது.

இதற்கிடையே 19 நாட்களை கடந்துள்ள விக்ரம் திரைப்படத்தின் ஏரியா வாரியான வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு – ரூ.162 கோடிகள்
கேரளா – ரூ.36 கோடிகள்
AP/TS – ரூ.29 கோடிகள்
கர்நாடக – ரூ.22 கோடிகள்
Rest of India – ரூ.9.75 கோடிகள்
ஒவர் சீஸ் – ரூ.114 கோடிகள்
மொத்தமாக விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ.374 கோடிகள் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

 

SHARE