19 எம்.பிக்கள் உட்பட அரசியல்வாதிகள் 29 பேருக்கு எதிராக பொலிஸ் நிதிசார் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது என்று சட்டமும் ஒழுங்கும் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்றின் போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க
எம்.பி.,
2015 ஜனவரி முதலாம் திகதி முதல் 2015 டிசம்பர் 31ம் திகதி வரை முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுக்கும், பிரதேச சபை, நகரசபை மற்றும் மாநகரசபை
உறுப்பினர்களுக்கும் எதிராக பொலிஸ் நிதிசார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவு?” என்று சட்டமும் ஒழுங்கும் அமைச்சிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு சட்டமும் ஒழுங்கும் அமைச்சு நேற்று சபையில் சமர்ப்பித்த பதிலிலேயே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.