அஜித் தமிழ் சினிமாவில் அனைத்து நட்சத்திரங்களுக்கும் பிடித்த நடிகர். இவருக்கு திரையுலகத்திலேயே பல பேர் ரசிகர்களாக உள்ளனர்.
தற்போதுள்ள ஹீரோயின் பலரின் பேவரட் அஜித் தான், அப்படியிருக்க அஜித்துடன் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் ஷரதா ஸ்ரீநாத் நடித்து வருகின்றார்.
இவர் இப்படம் குறித்து பேசுகையில் ‘கண்டிப்பாக இது எனக்கு மிக முக்கியமான படம் தான்.
பெண்கள் நலன் குறித்து அஜித் இந்த படத்தில் பேசுவதை கண்டிப்பாக எல்லோரும் கேட்பார்கள், ஏனெனில் அஜித் போல் ஒரு பெரிய நடிகர் இதை பேசுவது பலருக்கும் ரீச் ஆகும்’ என கூறியுள்ளார்.