நேற்று IPL கிரிக்கெட்டில் சென்னையின் CSK அணியும் கொல்கத்தாவின் KKR அணியும் சென்னை சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்தின.
சேப்பாக்கத்தில் நடக்கிறது என்றாலே, மைதானத்திற்கு பிரபல சினிமா பிரபலங்கள் வருகை தருவது வழக்கமானது தான். கடந்த போட்டிகளில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பலர் சேப்பாக்கத்திற்கு வந்திருந்தனர்.
அதே போல் நேற்று நடைபெற்ற போட்டியிலும் அட்லீ, தனுஷ் உள்ளிட்டோர் வருகை புரிந்துள்ளனர். அதிலும் தனுஷ் தனது மகன் லிங்காவுடன் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்துள்ளார்.