195 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட வவுனியா புதிய பேருந்து நிலையம் எதிர்வரும் மார்ச் 31வரை மூடப்படும் என மாவட்ட செயலக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு போராட்டமானது நிறைவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

288

 

இலங்கை அரச பேருந்து ஊழியர்கள் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டமானது நிறைவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று மேற்கொள்ளப்பட்ட நீண்ட கலந்துரையாடலின் பின்பே தீர்வு எட்டியுள்ளது.

வடமாகாணசபை அமைச்சர் டெனீஸ்வரனிற்கு இறுதி சடங்கு செய்யும் வவுனியா சாலை ஊழியர்கள்…!


இதில் இ.போ. ச. சாலை ஊழியர்கள், தொழிற்சங்க ஊழியர்கள், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், அமைச்சர் ரிஷாட் பதியூதீன். வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண போக்குவரத்து துறை அமைச்சர் ப. டெனீஸ்வரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கே. கே. மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், ஜெயதிலக, ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில், எடுக்கப்பட்ட முடிகளின்படி அனைவரிடமும் கையெழுத்து பெறப்பட்டுள்ளதுடன் அதில் கூறியுள்ள ஒப்பந்தத்தினை யார் மீறினாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இணைந்த நேர அட்டவணை வரும் வரையில் பேருந்து நிலையம் மூடப்படவுள்ளதுடன் நேர அட்டவணை வந்த மறுதினம் பேருந்து நிலையத்தின் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE