2 லட்சம் டாலருக்கு ஏலம் போன ஜான் எப். கென்னடியின் கடிதங்கள்

410
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியின் கடிதங்கள் 2 லட்சம் டாலருக்கு ஏலத்தின் மூலம் விற்பனையாகியுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபரான ஜான் எப். கென்னடி, 1943-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் பணியாற்றியபோது, தனது போர்க் கப்பலில் உடன் பணியாற்றிவந்த அமெரிக்க வீரர் ஹரோல்ட் மார்னி-யின் மரணத்ததுக்கு இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்தாருக்கு சில கடிதங்களை எழுதியிருந்தார்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஒரு ஏல நிறுவனம் இந்த கடிதங்களை சமீபத்தில் ஏலத்தில் விட்டது. இந்த ஏலத்தில் அவற்றை 2 லட்சம் டாலர் விலை கொடுத்து (இந்திய மதிப்புக்கு சுமார் 1 கோடியே 20 லட்சம் ரூபாய்) ஒருவர் வாங்கியுள்ளார்.

SHARE