2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செல்வங்களுடன் புதைக்கப்பட்ட அழகிய பெண் கண்டுபிடிப்பு

114

சைபீரியாவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பெண் மம்மியை கண்டுபிடித்துள்ளனர்.சைபீரியாவின் தென் பகுதியில் சயனோ- ஷுஷ்செஸ்காயா அணைக்கு அருகில் ஒரு பெண்மணியின் மம்மி மற்றும் எஞ்சியுள்ள பொருட்கள், பட்டுப் பையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட மற்றும் செல்வங்கள் அவருடன் புதைக்கப்பட்டுள்ளன.சுமார் 2 ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர், இதற்கு “தூங்கும் அழகி” (Sleeping Beauty) எனவும் பெயரிட்டுள்ளனர்.

அவருடன் இரண்டு பாத்திரங்கள் புதைக்கப்பட்டிருந்தன, இரண்டும் சவ அடக்க உணவு பாத்திரங்கள், அவரது மார்பில் பைன் கொட்டைகள் அடங்கிய ஒரு பை இருந்தது.அதேவேளை இந்த உடல் முழுமையாக மம்மியாக்கப்பட்டிருக்கவில்லை, எனினும் மம்மியாக்கப்பட்டிருந்த நிலையில் நீர் அரிப்புக்கள் காரணமாக உருக்குலைத்திருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

SHARE