
2 லட்சம் யூரோ மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாலியின் மிலானோ நகரில் விமானச் டிக்கட் மற்றும் இலங்கைக்கு பணம் அனுப்பி வைக்கும் நிறுவனமொன்றை நடத்தி வந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கை திரும்பவிருந்த 200 பேரிடம் இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த அனைவரும் நாடு திரும்புவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.
விமான டிக்கட் பெற்றுத்தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு போலியான விமான டிக்கடுகளை வழங்கியுள்ளார். இது குறித்து மிலான் நகர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.