2 விக்கெட்டுகள், 13 பந்தில் 30 ரன்கள்..வாணவேடிக்கை காட்டிய ரசல்

104

 

கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

கிறிஸ் லின் 67 ஓட்டங்கள்
Sheikh Zayed மைதானத்தில் நடந்த இன்டர்நெஷனல் லீக் டி20 போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் (Gulf Giants) அணி 6 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்தது. கிறிஸ் லின் 48 பந்துகளில் 3 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் விளாசினார்.

ஆந்த்ரே ரசல் மற்றும் இமாத் வாசிம் தலா 2 விக்கெட்டுகளும், வில்லே, அலி கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆந்த்ரே ரசல் வாணவேடிக்கை
பின்னர் களமிறங்கிய அபுதாபி (Abu Dhabi Knight Riders) அணியில் ஜோ கிளார்க் 14 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த அலிஷான் 11 ஓட்டங்களில் வெளியேற, மைக்கேல் பெப்பர் அதிரடி அரைசதம் விளாசினார். அவர் 40 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது க்ளீசன் ஓவரில் போல்டு ஆனார்.

ஆனால் ஆந்த்ரே ரசல் வாணவேடிக்கை காட்டினார். அவர் ஆட்டமிழக்காமல் 13 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 30 ஓட்டங்கள் விளாச, அபுதாபி அணி 18.2 ஓவர்களிலேயே 164 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

SHARE