20வது திருத்தச்சட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்குமா? வட, கிழக்கில் மாத்திரம் இன்றி, சிறுபான்மை மக்கள் நாடெங்கிலும் பரவி வாழ்ந்து வருகின்றனர்.

340

 

புதிய தேர்தல் திருத்தச் சட்டம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு உறுதியானது என அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Sampanthan-Chandrika

புதிய தேர்தல் திருத்த சட்டத்தின் ஊடாக வடமாகாணத்தில் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைக்கப்படக்கூடாது.

அத்துடன் வட, கிழக்கில் மாத்திரம் இன்றி, சிறுபான்மை மக்கள் நாடெங்கிலும் பரவி வாழ்ந்து வருகின்றனர்.

புதிய தேர்தல் திருத்த சட்டம் ஒன்று அமுலாக்கப்படும் போது, சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்நிலையிலேயே இந்த திருத்த சட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புதிய தேர்தல்முறை திருத்தச் சட்ட மூலத்தை அடுத்த வாரம் அமைச்சரவை அனுமதியுடன் நாடாளுமன்றத்தில் முன்வைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என புதிய தேர்தல் முறைமையை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினர் அசோக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த தினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை உறுதிபடுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE