20 போட்டிகளில் தோல்வி இல்லாமல் சாதித்துள்ளோம்! குழுவில் முதல் இடம் – ரொனால்டோவின் உற்சாக பதிவு

46

பெர்செபொலிஸ் அணிக்கு எதிரான போட்டி டிராவில் முடிந்ததைத் தொடர்ந்து, அல் நஸர் அணி தங்கள் குழுவில் முதல் இடம் பிடித்துள்ளது.

அல் நஸர் – பெர்செபொலிஸ் மோதல்ரியாத் நகரின் Al-Awwal Park மைதானத்தில் நடந்த AFC சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் அல் நஸர் (Al -Nassr) மற்றும் பெர்செபொலிஸ் (Persepolis) மோதின.

பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில் இரு அணி வீரர்களும் கடுமையாக போட்டி போட்டனர். குறிப்பாக அல் நஸரின் ரொனால்டோவை (Ronaldo) கட்டம் கட்டிய பெர்செபொலிஸ் வீரர்கள், அவரை கோல் அடிக்க விடாமல் தடுத்தனர்.

முதல் பாதியில் கோல்கள் விழவில்லை. ஆனால் இரண்டாம் பாதியிலும் அல் நஸரின் கோல் முயற்சிக்கு பெர்செபொலிஸ் முட்டுக்கட்டைப் போட்டது.

ரொனால்டோ மகிழ்ச்சி
அதேபோல் அல் நஸர் வீரர்களும் மிரட்டலாக செயல்பட்டு பெர்செபொலிஸ் வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். 57வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த ஷாட் நூலிழையில் கோலாக மாற தவறியது.

பின்னர் 78வது நிமிடத்தில் அவர் வெளியேறி மாற்று வீரர் களமிறங்கினார். இரு அணி வீரர்களும் கடைசி வரை போராடியும் ஒரு கோல் கூட விழாததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

ஆனாலும், புள்ளிப்பட்டியலில் அல் நஸர் அணி 13 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது.

பதிவிட்ட ரொனால்டோ, ‘எங்கள் குழுவில் நாங்கள் முதல் இடத்தைப் பிடித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம் மற்றும் 20 ஆட்டங்களில் தோல்வி அடையாமல் சாதித்துள்ளோம். இது சிறப்பான குழுப்பணி’ என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

SHARE