20 கோடிக்கு வொர்த்தான வீரர் தான்! பாகிஸ்தானை கதிகலங்க வைத்த பேட் கம்மின்ஸ்

226

 

அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்கள் வீழ்த்தி மிரள வைத்தார்.

ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் (Pat Cummins), பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த நிலையில் மெல்போர்னில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் மிரட்டலாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அதிலும் குறிப்பாக, 62 ஓட்டங்கள் விளாசியிருந்த அப்துல்லா ஷாஃபிக் அடித்த பந்தை, பவுலிங் செய்த கம்மின்ஸ் நொடிப் பொழுதில் பாய்ந்து கேட்ச் செய்தார்.

இதனால் ஷாஃபிக் அதிர்ச்சியுடன் பெவிலியன் திரும்பினார். பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 194 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கம்மின்ஸ் 37 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் மினி ஏலத்தில் 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கம்மின்ஸ், தற்போது டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி தனக்கான மதிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கம்மின்ஸ் Caught and Bowled செய்த வீடியோவை அவுஸ்திரேலிய கிரிக்கெட் பகிர்ந்த நிலையில், ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

 

SHARE