2000இற்கும் மேற்பட்டோர் கைது

115
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2008 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 185 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 33 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் 209 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 228 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நடவடிக்கையில் 2 கிலோ 400 கிராம் ஹெரோயின், 1 கிலோ 200 கிராம் ஐஸ், 12 கிலோ 200 கிராம் கஞ்சா, 5 கிலோ 200 கிராம் மாவா மற்றும் 17,054 மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. – ada derana

SHARE