(மன்னார் நகர் நிருபர்)
தேசிய மர நடுகை நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ( வனரோபா) வனமாக்கல் செயற்பாட்டின் கீழ் மன்னார் மாவட்டதில் 2000 கண்டல் தாவரங்களை நடுகை செய்யும் நிகழ்ச்சி ஆனது இன்று காலை 8 மணியளவில் ஆரம்பம் ஆனது.
தேசிய சுற்றாடல் தினமானது இன்று ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் இடம் பெறுவதையிட்டு கரையோர பாதுகாப்பு மற்றும் மூல வள முகாமைதுவ திணைக்களத்தின் எற்பாடில் மன்னார் தள்ளாடி பகுதியில் உள்ள கரையோர பகுதிகளை தூய்மை படுத்தி இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையிலும் மீன் இனங்களின் இனப்பெருக்க வீதத்தை அதிகரிப்பதற்க்காகவும் கரையோரங்கள் அரிக்கப்படுவதை தடுப்பதற்க்காவும் கரையோரங்களை அண்டிய தள்ளாடி பகுதியில் 2000 கண்டல் தாவரங்கள் நட்டப்பட்டன.
இலங்கை கரையோர பாதுகாப்பு மற்றும் மூல வள முகாமைதுவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு பிரபாத் சந்திர கீர்த்தி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் 500 மேற்ப்பட்ட பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு கண்டல் தாவரங்களை நாட்டி வைத்திருந்தனர்.




