ஐக்கிய தேசிய கட்சியினர் தன்னை அச்சுறுத்த முயற்சிப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குற்றம் சாட்டியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவரது டுவிட்டர் பதிவில்,
சில ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் என்னை பயமுறுத்துகின்றனர் என்று நான் நினைக்கிறேன். பலர் என்னிடம் பேசுவதற்காக குறுந்தகவல் அனுப்பி வைத்துள்ளனர்.
நான் மட்டக்களப்பு கருணா அம்மான். 2004ஆம் ஆண்டுக்கு முன்னர் கருணா அம்மான் என்றால் யார் என ஏனையவர்களிடம் கேளுங்கள் என கருணா குறிப்பிட்டுள்ளார்.