200MP கெமரா வசதி! மிரட்டலான பாதுகாப்பு அம்சம்.. சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

274

 

200MP என்ற மெகா கெமராவுடன் சியோமி தனது புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

சியோமி நிறுவனம் சியோமி 12T மற்றும் 12T ப்ரோ ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களிலும் 6.67 இன்ச் க்ரிஸ்டல்ரெஸ் 120Hz OLED டிஸ்ப்ளே, HDR10+ மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் அடாப்டிவ் HDR, 68 பில்லியன் நிறங்கள், அடாப்டிவ்சின்க் வழங்கப்பட்டு இருக்கிறது. டிஸ்ப்ளேவுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் ஆண்டி-கிளேர் கிளாஸ் உள்ளது.

200MP கெமரா வசதி! மிரட்டலான பாதுகாப்பு அம்சம்.. சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் | Xiaomi 12T Series Smartphone Features

சியோமி 12T ப்ரோ ஸ்மார்ட்போனில் 200MP பிரைமரி கெமரா வழங்கப்பட்டு இருக்கிறது. சியோமி 12T மாடலில் 108MP கெமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மொடல்களிலும் பிரைமரி கேமராவுடன் 8MP அல்ட்ரா வைடு கெமரா, 2MP மேக்ரோ கெமரா வழங்கப்பட்டு உள்ளது.

சியோமி 12T ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது. சியோமி ப்ரோவின் விலை 749 யூரோ மற்றும் 12T விலை 599 யூரோ ஆகும்.

SHARE