2013இல் சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கப்பல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

238

2013ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு கப்பல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு கப்பல்களுக்கும் சுமார் 15 மில்லியன் ரூபா மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக கணக்குகளில் காட்டப்பட்டுள்ளன.

இதன்படி இரண்டு கப்பல்களும் 70 மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம் குறித்த கப்பல்களை இலங்கைக்கு வழங்கிய சீன முகவர் ஒருவர் 2013 – 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 2000 மில்லியன் ரூபாவிற்கான பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் பதிவுகளில் தரவுகள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்தே இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

SHARE