2013ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
2013ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட 100 தொன் எடையுடைய வெடிபொருட்கள் காலாவதியானதன் பின்னர் பல்வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் மேலதிக பாதுகாப்புச் செயலாளராக கடயைமாற்றிய சுஜாதா தமயந்தி ஜயரட்ன, நாட்டை விட்டு சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தமயந்தியிடம் முன்னதாக விசாரணை நடத்தி ஆணைக்குழுவின் அதிகாரிகள் வாக்கு மூலமொன்றை பதிவு செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெடிபொருட்களின் பெறுமதி, எவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.