வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது வருடாந்த பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து 2015 ஆம் ஆண்டு கிராம மட்ட அமைப்புக்களுக்கு அவர்களது விண்ணப்பங்களின் அடி
ப்படையில், கோவில்களின் புனரமைப்பு, ஆலயங்களின் திருத்தவேலைகள், பாடசாலைகளின் ஒரு சில கட்டுமான வேலைகள் போன்ற புனரமைப்புப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளுக்கு உரிய வேலைத் திட்டங்கள் நிறைவடைந்த நிலையில், 10-01-2016 ஞாயிறு காலை அமைச்சரின் மன்னார் மாவட்டத்தில் உள்ள உப அலுவலகத்தில் வைத்து அதற்க்கான காசோலைகளை உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்.

அதனடிப்படையில் திட்டங்கள் நிறைவுற்ற ஒரு தொகுதி பின்வரும் கிராம மட்ட அமைப்புக்களுக்கு இன்று காசோலைகள் வழங்கப்பட்டது.
1. மன்னார் மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் சங்கம் – 2,50,000-00
2. புனித அடைக்கலநாயகி தேவாலயம், சாளம்பன் – 75,000-00
3. புனித மரியன்னை ஆலயம், நொச்சிக்குளம் – 50,000-00
4. புனித அந்தோனியார் ஆலயம், கறுக்காக்குளம் – 50,000-00
5. பிள்ளையார் கோவில், புளியங்குளம் – 75,000-00
6. புனித அந்தோனியார் ஆலயம், சிறுக்கண்டல் – 50,000-00
7. புனித தோமையார் ஆலயம், குமானயங்குளம் – 50,000-00
8. புனித அந்தோனியார் ஆலயம், சிறுத்தோப்பு – 50,000-00
9. ஜோசப் மாஸ்டர் ஆங்கிலப் பாடசாலை – 1,50,000-00
10. புனித பிலிப்புநேரிஸ் ஆலயம், கன்னாட்டி – 50,000-00
11. குருமட விளையாட்டு மைதானம், மன்னார் – 2,00,000-00
12. அன்னை வேளாங்கன்னி ஆலயம்,
இரணைஇலுப்பைக்குளம் – 50,000-00
13. பிரதேச வைத்தியசாலை, அடம்பன் – 2,50,000-00
14. அம்மன் கோவில், மண்கிண்டி – 50,000-00