ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் நளுக்கொரு வரம் பெறுவோம் என்னும் தொனிப்பொருளில் இன்று கிளிநொச்சி தேசிய மரம் நடுகை மாதத்தின் ஆரம்ப விழா ஆரம்பமானது.
கிளநொச்சி மகிழங்காடு திருவையாறு சந்தியில் இன்று காலை 9.30 மணிக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பமானது.
முதல் நிகழ்வாக தேசிய மரநடுகை மாத நுழைவாயிலை நிகழ்வின் முதன்மை விருந்தினர் வடக்கு மாகாண முதல்வர் சீ.வி. விக்கினேஸ்வரன் திறந்து வைத்தார்.
பின்னர் அங்கிருந்து விருந்தினர்கள் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டனர் .
தொடர்ந்து தேசிய மரநடுகை மாதம் தொடர்பாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி விக்கினேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண எதிர்கட்சித்தலைவர் தவராசா, ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் எனப்பலர் உரை நிகழ்த்தினர்கள்.
அடுத்து பாடசாலை மாணவர்களுக்கான நினைவுப்பரிசாக மரக்கன்று ஒன்று வடக்கு முதல்வரால் வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து வடக்கு முதல்வர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் எனப்பலர் மரக்கன்றுகளை நாட்டி வைத்தார்கள் .
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் குருகுலராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாண எதிர்க் கட்சி தலைவர் தவராசா, மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.