2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்!

289

625.400.560.350.160.300.053.800.748.160.70

உலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர் பட்டம் வென்றுள்ளார்.

இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் நேற்று உலக அழகன் போட்டி நடந்தது.

இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 47 பேர் பங்கேற்றனர், இவர்களிலிருந்து இந்தியரான ரோஹித் என்பவர் உலக அழகனாக தெரிவானார்.

பட்டம் வெல்லும் முதல் இந்தியரான ரோஹித்துக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.

2 வது இடத்தை அமெரிக்காவின் பியர்டோ ரிகோ தீவைச் சேர்ந்தவரும், 3வது இடத்தை மெக்சிகோவை சேர்ந்தவரும் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து ரோஹித் கூறுகையில், இந்த பட்டம் வென்றதை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை, பல ஆண்டு கனவு நினைவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச அளவில் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்பது கூடுதல் பெருமையாக உள்ளது எனவும், ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1)

SHARE