ஜேர்மனியில் பவேரியா மாகாணத்தில் உள்ள காவல் நிலையத்தை நபர் ஒருவர் தனது டிராக்டர் மூலம் மோதியது 2016 ஆம் ஆண்டில் மிக வெட்கக்கேடான குற்றமாக கருதப்படுகிறது. பவேரியா மாகாணத்தில் உள்ள காவல் நிலையத்தை நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் சிவப்பு நிற டிராக்டர் ஒன்று சேதப்படுத்தியுள்ளது. முதலில் காவல் நிலையத்தை நோக்கி வந்து மோதிய பின்னர், டிராக்டரை பின்னோக்கி எடுத்த அவர், மீண்டும் காவல் நிலையத்தில் மோதியுள்ளார், ஆனால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், ஆயிரக்கணக்கான யூரோ மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது. விசாரணையில் 46 வயதுடைய நபர் இந்த காரியத்தை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது, உளவியல் ரீதியாக பாதிப்பு ஏதேனும் இருத்தருப்பன் அவர் இவ்வாறு காவல் நிலையத்தை சேதப்படுத்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். தற்போது ஆயிரக்கணக்கான யூரோக்கள் சேதத்திற்கு யார் பதிலளிப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. |