இலங்கைக்கு இன்று விஜயம் செய்யவுள்ள பிரித்தானிய வெளியுறவு இராஜாங்க அமைச்சர் ஹுகோ ஸ்வைர், விஜயத்துக்கு முன்னர் இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த தடவை தாம் இலங்கைக்கு சென்றிருந்தபோது குறுகிய காலத்துக்குள் இலங்கை அரசாங்கம் யோசனைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சந்தேகம் இருந்தது.
எனினும் தற்போது இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முன்னேற்ற நடவடிக்கைகள் ஜனநாயகத்தை நிலைநாட்ட உதவும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் யோசனைகளை முன்னெடுப்பதன் மூலம் பிரித்தானிய பிரதமர் அறிவித்துள்ள 6.6 மில்லியன் பவுண்ட்ஸ்களை பெற்று அடுத்த மூன்று வருடங்களில் இலங்கை நன்மை பெறமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று இலங்கை வரும் ஸ்வைர், ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், வடக்கின் முதலமைச்சர் உட்பட்டவர்களை சந்திக்கவுள்ளார்.