2018 உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை அதிக கோல்கள் அடித்துள்ள வீரர்கள் பட்டியல்

153

ரஷ்யாவில் நடைபெற்று வரும் ஃபிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடையும் நிலையில் உள்ளன. ஸ்பெயின், உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம், குரோஷியா, ரஷியா, போர்த்துகல் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜெண்டினா அணி இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. அதே போல் ஜேர்மனி அணியும் தனது அடுத்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், இதுவரை நடந்த போட்டிகளில் அதிக கோல்கள் அடித்துள்ள வீரர்கள் யார் என்று பார்ப்போம்.

அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியல் (ஜூன் 25 வரை)

ஹாரி கேன் [இங்கிலாந்து] – 5 கோல்கள் (2 ஆட்டங்கள்)

ரொமெலு லுகாகு [பெல்ஜியம்] – 4 கோல்கள் (2 ஆட்டங்கள்)

கிறிஸ்டியானோ ரொனால்டோ [போர்த்துகல்] – 4 கோல்கள் (2 ஆட்டங்கள்)

தியாகோ கோஸ்டா [ஸ்பெயின்] – 3 கோல்கள் (2 ஆட்டங்கள்)

டெனிஸ் செரிஷேவ் [ரஷியா] – 3 கோல்கள் (3 ஆட்டங்கள்)

SHARE