2019-ம் ஆண்டு ஆரம்பத்திலே அமெரிக்காவால் இலங்கை அரசுக்கு வரப்போகும் நெருக்கடி..!

141

2019 மாசி மாதத்துக்குப் பின்னரான காலப்பகுதியில், இலங்கையை, தனது மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்குள் அமெரிக்கா கொண்டு வரும் என்று வெளிநாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் குழுவினர், அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

இதன் போதே, 2019 மாசி மாதத்துக்குப் பின்னர், இலங்கையை, தனது மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்குள் அமெரிக்கா கொண்டு வரும் என்று அலிஸ் வெல்ஸ் அம்மையார் தெரிவித்தார் என தெரிவிக்கப்படுகிறது.

நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை அமைத்தல் உள்ளிட்ட, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1, 34/1 தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, 2017ஆம் ஆண்டில் இலங்கைக்கு இரண்டு ஆண்டு காலஅவகாசம் அளிக்கப்பட்டதாகவும்.

ஆனால் ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையிலும், நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்கும் செயற்பாடுகள் மந்தகதியிலேயே இடம்பெறுவதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கடந்தவாரம் கூறியிருந்தார்.

அதேவேளை, 2019 மாசி மாதத்துடன், இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடையவுள்ளது. இந்த நிலையிலேயே, 2019 மாசி மாதத்துக்குப் பின்னர், , இலங்கையை, தனது மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்குள் அமெரிக்கா கொண்டு வரும் என்று அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக குறித்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE