2020ல் இலங்கையைக் கைப்பற்றவுள்ளதாம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு?

100
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் எதிர்வரும் 05 வருடத்தினுள் உலக நாடுகளில் பெரிய அளவிலான பகுதியை கைப்பற்றிக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ள வரைபடம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பி.பி.சி செய்தி சேவையினால் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2020ம் ஆண்டளவில் உலகின் பல நாடுகளை கைப்பற்றிக்கொள்வதற்கு இந்த தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பி.பி.சி ஊடகவியலாளர் அன்ட்றூ ஹோக்ஸ்சன் என்பவரினால் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இவ் வரைபடத்திற்கமைய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு கைப்பற்றிக்கொள்ள எதிர்பார்த்திருக்கும் பகுதிகளில் ஐரோப்பாவின் சில பகுதிகள், ஆபிரிக்காவின் சில பகுதிகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 05 வருடத்தினுள் கைப்பற்றிக்கொள்ளவுள்ள நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE