2020ம் ஆண்டில் சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கமொன்று அமைக்க முயற்சி!

206

download-2

2020ம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கமொன்றை அமைப்பதே எமது இலக்கு என பிரதி அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுபவ முதிர்ச்சியுடன் செயற்படுகின்றார்.

இம்முறை தேர்தலில் மக்கள் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான மக்கள் ஆணையை வழங்கவில்லை.

இதன் காரணமாகவே இணக்கப்பாட்டுடன் கூடிய தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முன்னின்று செயற்பட்டார்.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு, நிதிமோசடி விசாரணைப் பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவு ஆகியனவற்றின் விசாரணைகள் கிரமமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

காரணங்கள் இன்றி பழி வாங்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது.

மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவே, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படாமை அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் சரியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE