இடையில் சார்ஜ் ஏற்ற அவசியமின்றி 1600 கிலோ மீற்றர் தூரத்துக்கு ஓடும் புதிய வகை காரை அமெரிக்காவை சேர்ந்த ஆப்டெரா இ.வி. (Aptera EV) நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளது.
ஏர் பிளைன் வடிவம் கொண்ட கார் லைட்வெயிட் ரகத்தை சேர்ந்தது எனவும், சோலார் பவர் மூலம் நாளொன்றுக்கு 64 கிலோ மீற்றர் வரை சார்ஜ் ஏறும் வசதி உடையது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
காரிலிருக்கும் 100 கிலோ வாட் பேட்டரி மூலம் 1,600 கிலோ மீற்றருக்கு செல்லலாம் எனக் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.