2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு முன்னதாக 8 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்துள்ளது.
கடைசி நாள்
ஐபிஎல் 2024ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ம் திகதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் அணிகள் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும், வீரர்களை விடுவிக்கவும், அல்லது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ளவும் இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இன்று மாலைக்கு அனைத்து அணிகளும் தாங்கள் தக்க விரும்பிய வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8 வீரர்கள் விடுவிப்பு
அந்த வகையில் 2024ம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்காக CSK அணி தோனி, ஜடேஜா, கான்வே, ருதுராஜ் ஆகிய வீரர்களை தக்க வைத்துள்ளது.
மேலும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக 8 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்துள்ளது.
அதில், பென் ஸ்டோக்ஸ், பிரிடோரியஸ், பகத் வர்மா, சுப்ரன்ஷீ சேனாபதி, அம்பத்தி ராயுடு, ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.