2025 இற்குள் பொருளாதார பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை – பிரதமர்

157

2025 ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் நாட்டின் பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உலக பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுக்கத் தேவையான வேலைத்திட்டங்களை ஏற்படுத்துவதற்கான சக்தி எமது அரசாங்கத்துக்கு மாத்திரமே இருக்கின்றது.

2025 ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் நாட்டின் பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட பாரிய வெளிநாடுக்கடன் காரணமாகவே இந்தளவு பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

குருணாகல் கடுபொத பிரதேசத்தில் புதிய பொலிஸ் நிலைய திறப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

SHARE